தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா விற்பனை ? - வீடுவீடாக போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் பல வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி

சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஷெனாய்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் கஞ்சா விற்ற சந்திரசேகர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷெனாய் நகர்

குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான பல வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையால் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்