தமிழ்நாடு

சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கூட்டம் : மன்ற பணிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த முடிவு

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சேவைகளை வேகப்படுத்தவும், மாநிலம் முழுவதும் மன்ற பணிகளை கொண்டு செல்லவும், அமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம், சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இதில், மன்ற தலைவர் சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் ஜெகதீஸ் சவுந்தர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், காயல் இளவரசு, மாநில துணைத் தலைவர் சாம், மாநில துணை பொதுச்செயலாளர் எம்.சி.ராமச்சந்திரன், சட்ட ஆலோசகர் ஆறுமுக நயினார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், மன்றத்தின் சேவைகளை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லவும் முடிவு எடுக்கப்பட்டது. மன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்