தமிழ்நாடு

கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசனுக்கு கட்டாய விடுமுறை? : இந்து அமைப்புகள் குறித்த அறிக்கை எதிரொலியா?

பள்ளி, கல்லுாரிகளில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

பள்ளி, கல்லுாரிகளில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இதன் செயல்பாடுகளை கண்காணித்து, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி, கல்வித்துறை துணை செயலாளர் வெங்கடேசன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பள்ளி, கல்லுாரிகளில், இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த அமைப்புகளை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த அறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெங்கடேசன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்