சென்னை நெற்குன்றத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை தெரு நாய் கொடூரமாக கடித்துள்ளது.குழந்தையின் தொடை, பிறப்புறுப்பு பகுதியில் நாய் துரத்தி துரத்தி கடித்ததால் படுகாயத்துடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.