தமிழ்நாடு

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

தந்தி டிவி

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னையில் தலைவர்களின் பெயரில் உள்ள முக்கிய சாலைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.அதில், சென்னையின் சில முக்கியச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு, சமூக, பண்பாட்டு மற்றும் அறிவுசார் ஆளுமைகளின் நினைவாக தலைவர்களின், பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது, தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிப்பதாகும் என கூறியுள்ளனர். திராவிட இயக்கத்தைக் கட்டமைத்த பெரியார், அண்ணா மற்றும் காமராசர் பெயரில் சாலைகளுக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்றினால், அந்த நடவடிக்கை தமிழகத்தில் போராட்டத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு, மத்திய அரசு உட்பட, உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அந்தந்த சாலைகளுக்குப் பழைய பெயர்களையே மாற்றம் செய்து, தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

யாருடைய தூண்டுதலின் பெயரில் தமிழக அரசு பெயர் மாற்றம் செய்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்