தமிழ்நாடு

மனைவியின் மீதான சந்தேகத்தால் விபரீதம்.. பிறந்து 8 நாள் குழந்தையை கொன்ற தந்தை

மனைவியின் மீதான சந்தேகத்தால் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை அதன் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

மனைவியின் மீதான சந்தேகத்தால் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை அதன் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ். இவரின் மனைவி சிவரஞ்சனி. கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு வயது வித்தியாசம் 10 என்ற அளவில் இருந்ததால் மனைவியின் மீது ராஜிவ்க்கு எப்போதும் அளவு கடந்த சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், ராஜிவ். இதனிடையே கர்ப்பமடைந்த சிவரஞ்சனிக்கு 8 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.குழந்தை பிறந்த பிறகாவது கணவர் மனம் மாறுவார் என காத்திருந்த அந்த பெண்ணுக்கு காத்திருந்தது விபரீதம்... குழந்தையை கொஞ்சி மகிழ்வார் என எதிர்பார்த்த நிலையில் இந்த குழந்தை எனக்கு பிறந்ததே இல்லை என பிரச்சினையை மேலும் ஊதிப் பெரிதாக்கினார் ராஜிவ்.தினம் தினம் குழந்தையை வைத்தே பிரச்சினைகள் அரங்கேறி வந்த நிலையில் சம்பவத்தன்று அது மேலும் முற்றியது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை பிடுங்கிய ராஜிவ், அதை தரையில் வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது.இந்த குழந்தை எனக்கு பிறந்ததே இல்லை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே அந்த சிசுவின் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்தார் ராஜிவ் என்பது புகார்.விரக்தியின் விளிம்பிற்கு சென்ற சிவரஞ்சனி, தனது கணவர் ராஜிவ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே ராஜிவை போலீசார் கைது செய்தனர். பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் சிசுவை தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்