திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்பவரை மிதித்தது. இதில், படுகாயமடைந்த முருகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகள், தொடர்பாக பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக வனத்துறை மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைத்த பொதுமக்கள், முருகனின் உடலை பழனி - மதுரை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.