அங்குள்ள தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் பொன்மொழி, ராஜா, அருள்குமார் ஆகியோர் குழுவாக இணைந்த இந்த பணியை செய்து வருகின்றனர். மண்பாண்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து பானை வாங்கி, அதில் வர்ணம் தீட்டி, ஓவியங்கள் வரைந்து மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண பானைகளால் கவர்ந்திழுக்கப்படும் பொதுமக்கள், விருப்பமுடன் அதை வாங்கிச் செல்கின்றனர்.