தாராபுரத்தில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூலனூர் காவல் நிலையத்தில் வள்ளியம்மாள் என்பவர் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ராமசாமி என்பவருடன் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வள்ளியம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை இல்லாத சோகத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.