கஜா புயல், இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலான இடைவெளியில் கரையைக் கடக்கும் என்பதால், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை முன் கூட்டியே வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.