தமிழ்நாடு

சிசிடிவி காட்சிகள் தற்போது இல்லை - சுப்பையா விஸ்வநாதன்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி இயக்கவேண்டாம் எனக்கூறிய அதிகாரி தற்போது உயிருடன் இல்லை என அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த 7 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆஜராகி விளக்கமளித்தார்.

* இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆஜரான சுப்பையா விஸ்வநாதன், சிசிடிவி காட்சிகள் தற்போது இல்லை என்றும், (gfx in 2 ) சிசிடிவி இயக்க வேண்டாம் என கூறிய பாதுகாப்பு அதிகாரி இளங்கோவனும் தற்போது உயிருடன் இல்லை என வாக்குமூலம் அளித்தார்.

* மேலும் இளங்கோவனுக்கு சிசிடிவி இயக்க வேண்டாம் என உத்தரவிட்ட அரசு அதிகாரி குறித்து தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார் . இதையடுத்து, விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டது .

* இந்த பிரமாண பத்திரத்தில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்புகளை தயார் செய்து கொடுத்தது யார் ?

* அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கும் வெளியிட்ட அறிக்கைக்கும் உள்ள முரண்பாடுகளுக்கான காரணம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || "Whats App-ல் வரும் புது அப்டேட்.."இதனால் பெரும் ஆபத்து?" -செக் வைக்க மத்திய அரசு முடிவு

"தோழமை கட்சிகள் கூட்டத்தின் முக்கியமான பிளான் இதுதான்?" - அரசியல் விமர்சகர் சொல்லும் பாயிண்ட்

Breaking | Chennai | Highcourt | ரத்து.. | ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

CM Vijay | TVK Alliance | முக்கிய மீட்டிங்கில் யார் யார் உள்ளே? | தனித்தனியாக பேசும் CM விஜய்

BREAKING || "சீமானை பொது வேட்பாளராக இறக்கும் திமுக, அதிமுக? - பலத்தை கூட்ட தவெக போடும் பிளான்"