காதலிக்க மறுத்த +1 மாணவியை கழுத்தறுத்து போட்ட இளைஞர் - கடலூரில் பகீர் சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, காதலிக்க மறுத்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். எலக்ட்ரீசியனாக ஐயப்பன், 11-ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது சென்ற ஐயப்பன், மீண்டும் காதலிக்க வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்திந்த போலீசார் தப்பியோடிய ஐயப்பனை தேடி வருகின்றனர்.