கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு ஆண்கள் இடையேயான சண்டையை தடுக்கச் சென்ற பெண்,தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறு தொண்டமாதேவியை சேர்ந்தவர் மணிமேகலை. அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் பரசுராமன் ஆகிய இருவர், நிலம் தொடர்பாக சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில், அவர்களை தடுக்கச்சென்ற மணிமேகலை,தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.