Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

கொடிக்கம்பங்கள் நட இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் சென்னையில் கொடிக்கம்பங்கள் நட இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது சென்னையில் அரசியல், மதம், சங்கங்களின் நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொடிக்கம்பங்கள் நட சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பான நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 7 நாட்கள் மட்டுமே அனுமதி என்றும், மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 3 நாட்கள் மட்டுமே அனுமதி என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது கொடிக்கம்பங்கள் நட உதவி ஆணையர் அனுமதியளித்த பின் SMS மூலம் தகவல் அனுப்பப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com