நெல்லையில், ஆர்.டி.ஒ அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மண்டல வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஊழியர் ஒருவருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், ஒரு வார காலம் அலுவலகத்தை மூடி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்.டி.ஓ அலுவலகம் முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.