தமிழ்நாடு

வட்டி கேட்டு மிரட்டியதாக புகார்... தீக்குளித்த இளம்பெண்ணால் பரபரப்பு

நெல்லையில் வட்டிகேட்டு மிரட்டியதாக கூறி தீக்குளித்த இளம்பெண் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தி டிவி

வட்டி கேட்டு மிரட்டியதாக புகார்... தீக்குளித்த இளம்பெண்ணால் பரபரப்பு

நெல்லையில் வட்டிகேட்டு மிரட்டியதாக கூறி தீக்குளித்த இளம்பெண் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியை சேர்ந்தவர் பிரதாபன். சென்னையில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ரேகா. இவர்களுக்கு 2 குழந்தைகள். சொந்த ஊரில் தன் பிள்ளைகளுடன் வசித்து வந்த ரேகா, கடந்த 17ஆம் தேதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேகா, வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன் ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாயை வட்டிக்கு கடனாக வாங்கியதாகவும், ஊரடங்கால் தொழில் முடங்கியதால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை என கூறியுள்ளார். ஆனால் வட்டியை கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் இந்த முடிவை எடுத்ததாக ரேகா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்