தமிழ்நாடு

தைலாபுரம் தோட்டம் அருகே வெளிமாநில இளைஞரால் பரபரப்பு

தந்தி டிவி

திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் மே மாதம் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளதால் சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆவடி பகுதியை சார்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தலையில் கட்டுடன் சாலையில் தள்ளாடிவாறே வந்த பீகார் மாநிலத்தை சார்ந்த நபர் ஒருவர் திடீரென ராமதாசின் இல்லம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் நின்று திண்டிவனம் நோக்கி சென்ற வாகனங்களை மறித்தவாறு இரு கைகளை உயர்த்தி நின்றார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குளான நிலையில் சிறிது நேரம் கழித்து ராமதாசின் இல்லத்திற்குள் செல்ல முற்பட்டதால் காவலர்கள் மதுபோதையில் இருந்தவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ராமதாஸ் இல்லம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை