நீலகிரி மாவட்டம் உதகையில் 126-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதேபோல் 19வது ரோஜா கண்காட்சி, அரசு ரோஜா பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் வன விலங்குகளின் வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு சுமார் அறுநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.