கல்லூரி பஸ் மோதி ஸ்பாட்டிலேயே ஒருவர் பலி - அதிர்ச்சி காட்சி #collegebus #acidente #thanthitv #ramanathapuram கல்லூரி பேருந்து மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - ஓட்டுநர் கைது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி, இருசக்கர வாகன ஓட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்... தனியார் கல்லூரி பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நெடியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து அருகில் உள்ள பண்ணை குட்டைக்குள் புகுந்தது. விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநரான கருமல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து செய்த கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்...