தமிழ்நாடு

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை

சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

தந்தி டிவி

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது செய்திகளை பார்க்கும் போது சின்னதம்பி யானை, கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லை எனவும், அதே சமயம் பயிர்களுக்கு பாதிப்பும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா, யானையை காட்டுக்கு அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது என்றார்.

யானை சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாய் அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன்படி யானையை பிடித்து முகாமில் பாதுகாத்து பராமரிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை செவ்வாய் கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு