கோவை தீத்திபாளையம் ஊராட்சி தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றார். தேர்தலின் போது பிளாஸ்டிக் இல்லா தூய்மையான ஊராக மாற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தீத்திப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற அவர், சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அவரிடன் இந்த செயலை கண்ட ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.