கோவையில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மினி ஆட்டோ மோதி உயிரிழந்தார். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நயன், கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி ஆட்டோ, நயன் மீது மோதியதில், தரதரவென இழுத்து செல்லப்பட்டான். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், சிறுவன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இந்த விபத்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது.