முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் 3 கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்குழுமத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினார்.