தமிழ்நாடு

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் , குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

தந்தி டிவி

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, மதுரையில் மஹபூப்பாளையம் ஜின்னா திடலில் தர்னா போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

* கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைப்பு தலைவர்கள் , குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினரும் இஸ்லாமிய அமைப்புகளும் பங்கேற்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்