தமிழ்நாடு

Chitra Pournami | சித்ரா பெளர்ணமி - பர்வதமலை செல்லும் பக்தர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு

Chitra Pournami | சித்ரா பெளர்ணமி - பர்வதமலை செல்லும் பக்தர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு

thanthitv

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள புகழ்பெற்ற பர்வதமலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மட்டும் பக்தர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படும் நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் சுவாசப் பிரச்சினை, இதய நோய் உள்ளவர்கள் மலையேறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பக்தர்கள் நலன் கருதி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Parthiban | ``சாதி மதமற்றவர் பார்த்திபன்’’ - முடித்துவைத்த ஐகோர்ட்

Election Result | மே 4 ரிசல்ட்.. பரபரப்பாக ஒரே இடத்தில் கூடிய அதிகாரிகள்

#BREAKING || இதை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் - பறந்த எச்சரிக்கை

TN Results 2026| மே 4ம் தேதி ரிசல்ட்டுக்கு முன்பே IAS அதிகாரிகள் வருகை

NHAI | மதியம் 12 முதல் 4 மணி வரை திடீர் தடை