#madrashighcourt #justicemmshrivastava மகள்களை நினைத்து கலங்கிய தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு பெற்றார். அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், இளம் வழக்கறிஞர்களுக்காக சென்னையில் நிரந்தர பயிற்சியகம் அமைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார். தனது உரையின் போது, 'பணி நிமித்தமாகத் தந்தையாகத் தனது மகள்களுக்கு உதவியாக இருக்க முடியவில்லை' எனக் குறிப்பிட்டு தலைமை நீதிபதி உணர்ச்சிவசப்பட்டார். 150 ஆண்டுகள் பழமையான இந்த நீதிமன்றத்தில் பணியாற்றியது பெருமை அளிப்பதாகத் தெரிவித்த அவர், இனி வரும் காலங்களில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடப் போவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்...