தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில், தேர்வு குழுவில் உறுப்பினர்களாக உள்ள பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டனர். குழுவின் மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் இந்த கூட்டத்தை புறக்கணித்தார். தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தேடுதல் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மூன்று பேர் கொண்ட பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. அதிலிருந்து ஒரு நபரை தேர்வு செய்து ஆளுநர் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.