தமிழ்நாடு

கட்டையால் இளைஞர் அடித்து கொலை - 3 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

சென்னையில் இளைஞரை கொலை செய்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்குள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் நடந்து சென்ற மணிகண்டனை 3 பேர் கும்பல் வழிமறித்து கட்டையால் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கா, ஹேமந்த்குமார், பாலு ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை

தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான மணிகண்டன் மீது பல வழக்குகள் உள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு