சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தவர் துக்காராம். இவரது மனைவி தாராபாய். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தாராபாய் கொளத்தூரில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் தாராபாய் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நட்பாக பழகி வந்தார். இதனால் துக்காராமுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். பின்னர் பயத்தில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.