இன்ஸ்டாவில் ஆண் நண்பர்களுடன் Chat செய்த மனைவி - கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொ*ற கணவன்
சென்னை அம்பத்தூரில் இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகிய மனைவியை, கழுத்தை அறுத்து கொன்ற கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னா, தனது மனைவி தேவகியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. தேவகி ஆட்டோ ஓட்ட, பின்னால் அமர்ந்த சின்னா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில் தேவகி உயிரிழந்த நிலையில், சின்னாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்