தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை சனம் ஷெட்டி
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து நடிகை சனம் ஷெட்டி ஆதரவு தெரிவித்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கொரோனா காலத்தில் தூய்மைப்பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு விட்டு, நமக்காக தெருவில் இறங்கி சுத்தம் செய்தார்கள் என்றும் அவர்களுக்காக நான் துணையாக இருப்பேன் என்றும் பேசியுள்ளார். மேலும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற, அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்