சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பத்மநாபன் என்பவர், தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, 48 சவரன் நகை, ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பத்மநாபன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.