தமிழ்நாடு

Chennai | பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டிய ரெக்கவரி ஏஜென்ட்.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டிய ரெக்கவரி ஏஜென்ட்.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

thanthitv

சென்னையில் லோன் வாங்காத பெண்களை குறிவைத்து ஆபாசமாக பேசி மிரட்டிய, தனியார் நிறுவன ரெக்கவரி ஏஜென்ட் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாலிகிராமத்தை சேர்ந்த 49 வயது பெண் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், போரூரை சேர்ந்த சரண் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 3-வது தரப்பு லோன் ரெக்கவரி ஏஜென்ட்டாக பணிபுரிந்து, வாடிக்கையாளர்கள் மற்றும் லோன் வாங்காதவர்களிடம் பெயரை மாற்றி, தன்னை வழக்கறிஞர் என்றும், உயர்நீதிமன்றத்திலிருந்து பேசுவதாகவும் கூறி மிரட்டியதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட சரணின் பின்னணியில் மர்ம கும்பல் இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Sivagangai Ajithkumar Case | ``கைது செய்ய தடை’’ - அஜித்குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

Breaking | Shigella | Keralam | கோர முகத்தை காட்டும் `ஷிகெல்லா' - படுவேகமாக அதிகரிக்கும் பாதிப்பு

Tasmac Close List | தமிழகமே கேட்டது - டாஸ்மாக் மூடல்.. லிஸ்டை வெளியிட்டது தமிழக அரசு

Chennai | TN Police | மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சென்னையில் அதிர்ச்சி

Court | CBI | Tihar | NEET | நாட்டையே உலுக்கிய விவகாரம்.. திகார் சிறைக்குள் இறங்கும் CBI