ஊரப்பாக்கத்தில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெங்கையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பூபதி, சென்னை மெட்ரோ வாட்டரில் கிளர்க்காக பணியாற்றி வந்தார். தனக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் நண்பர்களுடன் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பூபதியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி உயிரிழந்தார்.