இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் 3000 பெண்கள்
பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.பரதமுனி சமஸ்கார நடனம் என்ற தலைப்பில் பிரபல பரதநாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் வடிவமைத்திருந்த இந்த நிகழ்ச்சியில்,நாட்டிய பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்று நடனம் ஆடினர்.