தமிழ்நாடு

10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...

பத்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை மதுரவாயலில் 10 வயதான சிறுமி நேற்று நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல வெளியே வந்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றமான பெ​ற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞர் கழிவறைக்கு சென்ற சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த அவர், 3வது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக, தெரியவந்ததை தொடர்ந்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்