Chennai | Lorry Accident | வந்த வேகத்தில் தடுப்பு சுவரில் மோதி நின்ற லாரி - ஓட்டுநரின் நிலை என்ன? - சென்னையில் பரபரப்பு சென்னை வடக்கு உஸ்மான் சாலையில், மகாலிங்கபுரம் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பூவிருந்தவல்லி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த டிப்பர் லாரி வடக்கு உஸ்மான் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, மகாலிங்கபுரம் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. விபத்தைப் பார்த்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சாலையில் சிதறிய மண்ணை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தடுப்புச்சுவரில் சிக்கிய லாரியை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், மகாலிங்கபுரம் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது