அண்மையில் டெல்லியில் நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 3வது சீசனில் , சென்னை லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையொட்டி சேப்பாகத்தில் சென்னை அணிக்கு, பாராட்டு விழா நடந்தது. விழாவில் சென்னை லயன்ஸ் கேப்டன் சரத் கமல், அணி உரிமையாளர்கள் ஐஸ்வர்யா தனுஷ், சமீர்பரத் ராம் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா தனுஷ், சூப்பர் டென்னிஸ் என்ற பெயரில் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு அகடாமியை சரத் கமலுடன் இணைந்து தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.