சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதன் வால் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டதை அடுத்து அதில் பயணித்த 154 பேர் உயிர்தப்பினர். இதனையடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.