தமிழ்நாடு

சீனாவில் இருந்து இறங்கிய கண்டைனர்... கெத்தாக மாமூல் கேட்ட சுங்க அதிகாரி... கொத்தாக இறுக்கிய சிபிஐ

தந்தி டிவி

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, சீனாவில் இருந்து ஃபேப்ரிக் வகை பொருள்களை துறைமுகம் வழியாக சென்னைக்கு இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதி செய்யும் பொருள்களை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வர, சென்னையை சேர்ந்த தனியார் லாஜிஸ்டிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரி மனிஷ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். இதில், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வெளியில் கொண்டு வர மனிஷ் 50 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர் லஞ்சம் கொடுத்து பொருள்களை வெளியே எடுத்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக சிபிஐ போலீசில் ஆதாரத்துடனும் புகாரளித்துள்ளனர். இதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரி மனீஷ் மீதுவழக்குபதிவு செய்திருக்கும் சிபிஐ போலீசார், இது குறித்தான விசாரணைக்கு அதிகாரிக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."