தமிழ்நாடு

Chennai Bus Accident| 40 பயணிகளோடு சென்ற சென்னை பேருந்துக்கு நேர்ந்த பயங்கரம் - பதறவைக்கும் காட்சி

Chennai Bus Accident| 40 பயணிகளோடு சென்ற சென்னை பேருந்துக்கு நேர்ந்த பயங்கரம் - பதறவைக்கும் காட்சி

thanthitv

40 பயணிகளோடு சென்ற சென்னை பேருந்துக்கு நேர்ந்த பயங்கரம் - பார்த்தாலே பதறவைக்கும் காட்சி

திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து சென்னை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

CM Vijay | திறந்து வைக்கிறார் CM விஜய் - பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் ஆரம்பம்

Today Gold Price| அதிரடியாக குறைந்தது.. ஆசுவாசப்படுத்திய இன்றைய தங்கம் விலை

Indane Xtralite Cylinder| `இண்டேன்’ இறக்கிய புதிய சிலிண்டர் - 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும்

Armstrong Case | "ஆம்ஸ்ட்ராங் கேஸ்ல பேரை சேர்த்துடுவேன்’’ - அம்பலமான இன்ஸ்பெக்டர் புகாரி

Cauvery | Hogenakkal| தமிழகத்தை காவிரி தொட்டதும் உடனே தடை விதிப்பு