Indane Xtralite Cylinder| `இண்டேன்’ இறக்கிய புதிய சிலிண்டர் - 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும்
Indane Xtralite Cylinder| `இண்டேன்’ இறக்கிய புதிய சிலிண்டர் - 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும்
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்காக, புதுச்சேரியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘எக்ஸ்ட்ராலைட் நவ்“ எனப்படும் எல்பிஜி சிலிண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து 4 மணி நேரத்தில் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைபர் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட இந்த சிலிண்டர் எடை குறைவாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது
