Chennai Avadi Arrest அடுத்த சம்பவத்துக்கு `ஸ்கெட்ச்’ போட்ட ஸ்பாட்டிலேயே தூக்கிய போலீஸ்
சென்னை, ஆவடி அருகே, ரயில் நிலையங்களை ஒட்டிய பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட 26 வயதுடைய முக்கேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வழக்குகளில் தொடர்புடைய முக்கேஷை நெமிலிச்சேரி ரயில் நிலையம் அருகே வீடுகளை நோட்டமிட்டபோது போலீசார் அவரை பிடித்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து சுமார் 18 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.