தமிழ்நாடு

சிறுத்தையைப் பிடிக்கச் சென்ற இளைஞர்கள் - திடீரென சீறிப் பாய்ந்து தாக்கிய சிறுத்தை

வாணியம்பாடி அருகே, ஆறுபேரை தாக்கிய சிறுத்தை ஒன்று, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தந்தி டிவி
வாணியம்பாடி அருகே, ஆறுபேரை தாக்கிய சிறுத்தை ஒன்று, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர்மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள நாகலேரி என்ற பகுதியில், பாரதி என்ற கூலித்தொழிலாளியை சிறுத்தை பைன்று தாக்கியது. பாரதியைக் காப்பாற்ற முற்பட்ட அவரது தங்கையையும் சிறுத்தை கடுமையாக தாக்கியது. தகவலறிந்த கிராம மக்கள், புதருக்குள் பதுங்கிய சிறுத்தையைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஏரிப்பகுதியில் அவர்கள் தேடிக்கொண்டிருந்த போது, திடீரென அங்கு சிறுத்தை பாய்ந்தது. இதனால் தேடுதலில் ஈடுபட்டவர்கள் அலறியடித்து ஓடினர். சிறுத்தையும் அவர்களை விடாமல் விரட்டியது. சிதறி ஓடியவர்களில் மூன்று பேரை சிறுத்தை தாக்கியது. இதையடுத்து கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

CM Vijay | Samantha | CM விஜய்யுடன் சமந்தா சந்திப்பு

BREAKING || ED Raid | ரூ.400 கோடி மோசடி - தமிழகத்தில் இறங்கி அதிரடி காட்டிய ED

High Court | Telegram | டெலிகிராம் எடுத்த முடிவு.. மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்

Egg | Egg Price | Poultry | காஸ்ட்லீ பொருளாகும் முட்டை வரலாறு காணாத விலை உயர்வு

BREAKING || "என்ன பெரிய AI.. இவர்களுக்கு இணையாக முடியுமா" - சென்னை ஐகோர்ட் கருத்து