ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை எனவும், கிருமி நாசினி தெளித்து பணிகளை தொடரலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு, வழக்கத்துக்கு மாறாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் அலுவலகத்தை 48 மணி நேரத்திற்குள் மூடவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது