#kodaikanal | #caraccident
கொடைக்கானலில் மலையில் இருந்து உருண்ட கார்... கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில் 200அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் இருந்து தரைத்தளப்பகுதிக்கு செல்வதற்கு வத்தலகுண்டு, பழனி மற்றும் அடுக்கம் சாலைகள் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் அடுக்கம் மலைச்சாலையில் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகும்.இந்த நிலையில் கொடைக்கானலை சேர்ந்த சலீம் என்பவர் தனது குடும்பத்தினருடன் பெரியகுளம் பகுதியிலிருந்து அடுக்கம் மலை பாதை வழியாக கொடைக்கானல் சென்றுள்ளார். மலை சாலையில் மற்றொரு வாகனத்திற்கு வழிவிடும் போது, எதிர்பாராத விதமாக கார் சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து, காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலை துறையினர் இந்த பகுதியில் முறையான தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.