சென்னை வண்டலூர் அருகே தனியார் நிறுவன பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிமங்கலம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சின்னையா. கொத்தனாரான இவர், படப்பையில் பணி முடித்துவிட்டு சக ஊழியர்களான பரதன் மற்றும் வேலு ஆகிய இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
மண்ணிவாக்கம் விஜயலட்சுமி நர்சிங் கார்டன் அருகே சென்றபோது, நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதில் சின்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த பரதன் மற்றும் வேலு ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.