CM தனிப்பிரிவிற்கு வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளும் காவல்துறையினர்.
நேற்று தலைமைச் செயலக வளாகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட நிலையில் தீவிர சோதனை.
தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனது உடையில் வைத்து அந்த பெண் மறைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் தலைமைச் செயலக வளாகத்திற்கு உள்ளே வருபவர்கள் கொண்டுவரும் வாட்டர் பாட்டில்கள் கூட சோதனை செய்யப்படுகிறது.
முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனத்தில் உள்ளே அழைத்து வரப்படுகின்றனர்.
தலைமைச் செயலக வளாகத்திற்கு உள்ளே வரும் பொழுது பரிசோதனை மேற்கொண்ட பின் பேட்டரி வாகனத்தில் மாற்றத்திறனாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பேட்டரி வாகனத்தில் இருந்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு செல்ல சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் அளிக்க வரும் நபர்களுடன் காவல் துறையினரும் பாதுகாப்புக்காக வருகின்றனர்.