தமிழ்நாடு

27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 142 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 142 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில், லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் தயாரிப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 62 ஆயிரம் குப்பிகளாக இருந்தது.இப்போது ஜூன் மாதத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.அதே சமயம் 9 லட்சத்து ஐந்தாயிரத்து லிபோசோமல் ஆம்போடெரிசின் மருந்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மே 11-ந் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 7 லட்சத்து 28 ஆயிரத்து 45 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு இதுவரை 25 ஆயிரத்து 260 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு