தமிழ்நாடு

வைகோ உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு வைகோவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினர்.

தந்தி டிவி

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி, திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உருவபொம்மையை கைப்பற்றினர். இதனால் போலீசாருக்கும்-பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து, வைகோ மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, பாஜகவினர் மணப்பாறை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு